தமிழகம் லைஃப் ஸ்டைல்

43வது சென்னை புத்தக கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் நடைபெறவுள்ள 43வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.அதன்படி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த புத்தக கண்காட்சியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சியில் ‘கீழடி அகழாய்வு’ என்ற தலைப்பின் கீழ் மாநில தொல்லியல் துறை சார்பாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சாமான்ய மக்களின் தோழனாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..குவியும் பாராட்டுக்கள்..

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘புத்தக கண்காட்சிக்கு அடுத்த ஆண்டு முதல் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், புத்தகம் என்பது மனிதர்களிடையே பேசாமல் பேசுகின்ற நண்பன்’ எனவும் குறிப்பிட்டார்.

ஜனவரி 9ம் முதல் 21ம் தேதி நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி வார நாட்களில் தினமும் மாலை 3 மணி முதல் 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் இருக்கும். பள்ளி மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் தீடீர் ஆலோசனை !

விழாவின் இறுதிநாளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள உள்ளார். இந்த புத்தக கண்காட்சியை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்று மாதங்களில் ரூ.4,000- தமிழக அரசு அறிவிப்பு!!

naveen santhakumar

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் :

naveen santhakumar

மாதவிடாய் காலத்தில்பெண்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம்….

naveen santhakumar