விளையாட்டு

ரூ.4 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்ன் தொப்பி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் பயன்படுத்திய தொப்பி ரூ.4.92 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்து, தான் கிரிக்கெட் விளையாடும்போது உபயோகித்த தொப்பியை ஏலத்தில் விடப் போவதாக அறிவித்தார்.

ALSO READ  முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்க தயாராகும் இந்தியா

இந்நிலையில் ஷேன் வார்ன் தொப்பிக்கு அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ.4.92 கோடி வரை கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்த ஏலத்தில் பங்கேற்று 25 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலம் கேட்டு உள்ளார்.

ஆனால் இந்தத் தொப்பி யாருக்கு செல்லும் என்பதை இன்று தான் தெரியவரும். அவர்களுக்கு தொப்பியுடன் சேர்த்து ஷேன் வார்ன் ஆட்டோகிராப் கிடைக்க உள்ளது. இதுவே கிரிக்கெட் உலகில் அதிக விலைக்கு ஏலம் போன பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க வீரர்.! 

News Editor

அதிகரிக்கும் கொரோனா; நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் ரத்து ! 

News Editor

மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

Admin