தமிழகம்

சாமான்ய மக்களின் தோழனாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..குவியும் பாராட்டுக்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் இருக்கு தீர்வு காணமுடியாமல் பல உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.

இந்தியாவில் தற்போது வரை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் இயன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பலரும் முதல்வரை அவரது ட்விட்டர் பக்கம் வழியாக எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அவ்வாறு தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறும் மக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக தமிழக முதலமைச்சர் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சிலர் வந்திருப்பதாகவும் தேசிய ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலூரில் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு உதவி புரிய முடியுமா என்று தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

ALSO READ  பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை… வெளியான பகீர் காரணம்!

அதற்கு டுவிட்டரில் பதில் கொடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் தங்கியிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு உணவு இருப்பிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதைப்போல தெலுங்கு பட நடிகர் பவன் கல்யாண் டிவிட்டரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற ஆந்திர மீனவர்கள் தேசிய ஊரடங்கு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை துறைமுகத்தில் சிக்கித்தவித்த ஆந்திர மீனவர்களுக்கு உணவு தண்ணீர் பாட்டில் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி அதுதொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்கிட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்

அதேபோல சாமானியரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களுடைய குறைகளையும் நிவர்த்தி செய்திருக்கிறார் தமிழக முதல்வர். ஒரு பகுதியிலிருந்து வேலைக்காக தமிழகம் வந்த சிலருக்கு உணவு மற்றும் இருப்பிடம் தொடர்பாக பொதுமக்கள் சிலர் ட்விட்டரில் கோரிக்கையை வைக்க சென்னை மாநகராட்சி மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி.

ALSO READ  ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 499 செலுத்தி முன்பதிவு

மேலும் மதுரையைச் சேர்ந்த சிறுமி துர்கா கொரோனா வைரஸ் தடுப்பது தொடர்பாக ஓவியம் வரைந்து தமிழக முதல்வரை டிவிட்டரில் டேக் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் சிறுமியின் முயற்சியை பாராட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதேபோல சென்னை வண்ணாரப்பேட்டையில் பீகார் மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் தேசிய ஊரடங்கு காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு உணவு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.

சாமானிய மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன அதைப்போல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பம்பரமாக சுழன்று தமிழக மக்களை பாதுகாப்பதில் முதன்மையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சல்யூட்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினியுடன் கூட்டணி ..! கமல்ஹாசன் பேட்டி..

News Editor

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !

News Editor

ஆகஸ்ட் 25 அன்று விவசாயிகளைச் சந்திக்க பா ஜா க முடிவு

News Editor