உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு….4 பேர் பலி …3 பேர் படுகாயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:

உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்றளவும் இருந்து வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் காலூன்றி வரும் I S பயங்கரவாத அமைப்பு போலியோ தடுப்பூசி குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் கடந்த சில நாட்களாக போலியோ தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

ALSO READ  ஷாப்பிங் மாலில் திடீரென துப்பாக்கிச் சூடு-8 பேர் காயம்:

இந்நிலையில் நேற்று காலை ஜலாலாபாத்தில் போலியோ தடுப்பூசி குழு உறுப்பினர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி தொடர்ந்து 24 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை..

naveen santhakumar

சுவீடனில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விபத்து :

Shobika

நிருபரின் கேள்வியால் கோபமான டிரம்ப்:

naveen santhakumar