ஜோதிடம்

திருவாதிரை அன்று களி ஏன்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவ பெருமானின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. அவரின் பிறந்த தினமான மார்கழி திருவாதிரை நட்சத்திரம் அன்று ஏன் களி சாப்பிடுகிறோம் ???

பட்டினத்தார் சீடர்களில் ஒருவர் சேந்தனார் , இவர் நாகூரில் வாழ்ந்தவர் , இவர் தினமும் சிவ அடியார்களுக்கு உணவுக்கொடுத்தப்பின்பே தான் உண்பாராம்.ஒரு மார்கழி திருவாதிரையில் ஏற்பட்ட மோசமான கால நிலையால் அவரால் உணவு தயார் செய்ய இயலவில்லை. அவரோ சிவனடியார்க்கு உணவு படைத்தாக வேண்டும்.

அவரிடமிருந்த அரிசி மாவினை குழைத்து அதை படைக்க தயாரானார். யாரும் வரவில்லை இதை உணர்ந்த சிவ பெருமான், தானே சிவனடியாராக உருக்கொண்டு அவரது குடிசைக்கு சென்று அவர் தந்த உணவை உண்டு அவர் பெருமையை உலகிற்கு பறை சாற்றிட ,மறுநாள் அவ்வூரின் திருக்கோயிலில் சிவபெருமானின் கருவறையில் பெருமானைச்சுற்றிலும் முதல் நாள் சேந்தனார் தந்த மாவு சிதறிக்கிடக்க அனைவரும் அவரின் பக்தியையும் , சிவ பெருமானின் லீலையையும் அறிந்து அன்றிலிருந்து அதுவே அவருக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது .

ALSO READ  யானையை அடிச்சு தூக்கும் எருமைகன்று.. கெத்து காட்டிய வீடியோ..

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.மார்கழி திருவாதிரை தினத்தன்றே நந்தனார் என்ற சிவனடியார்க்கு மோட்சப்பேறை சிவபெருமான் சிதம்பரத்தில் அளித்ததாக வரலாறு.

கேரளாவில் விசேஷமாக கொண்டாடப்படும் திருவாதிரை விடியற்காலையில் குளம் , ஆற்றில் நீராடி , அரிசி சோற்றினை தவிர்த்து , பாட்டு பாடி ஆடி , விரதம் பூண்டு கொண்டாடுகின்றனர் .நம் ஊரிலும் காலையில் நீராடி , பூஜையறையில் வாழையிலையிட்டு , களி படைத்து பெண்கள் உண்டப்பின்பே , ஆண்களுக்கு சாப்பிடத்தரும் பழக்கம் குடும்பங்களில் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை…..

naveen santhakumar

வெளுத்து வாங்கும் மழை- தத்தளிக்கும் சீனா ..!

naveen santhakumar

கேரளா மாநிலத்தில் சுற்றுலா செல்ல அனுமதி

News Editor