அரசியல்

எல்.முருகனுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

ALSO READ  குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து - சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர்

இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள், 28 பேர் இணை அமைச்சர்கள். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Stalin a 'liar', launching desperate bid to gain power, says BJP's state  unit head Murugan - The Economic Times

இதில், தமிழகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக தேர்வாகியுள்ள எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ  தமிழ் நாட்டில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்பு

இந்த நிலையில், மத்திய இணையமைச்சரான எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எல். முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பஞ்சாயத்து தலைவராக வெற்றி.. அடுத்த நாளே உயிரிழப்பு.. நடந்தது என்ன?

Admin

தமிழக ஊர்தி இடம்பெறாதது ஏன்?… முதல்வருக்கு ராஜ்நாத் சிங் கடிதம்!

naveen santhakumar

குடியரசு தின அலங்கார ஊர்தி…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar