இந்தியா

வாரணாசியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாரணாசி:-

தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாரணாசி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம்,

கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து, வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ALSO READ  2-சக்கர வாகன நம்பர் பிளேட்டில் பாலினம் குறித்த பதிவு : புது டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ்
Prime Minister Narendra Modi inaugurates development projects in Varanasi. (PTI Photo)

ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் ரூ. 839 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கார்கியான்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய சாதனையை நிகழ்த்திய மாருதி Baleno

News Editor

கேரளாவில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல்:

naveen santhakumar

2021 ஜூன் வரை இலவச ரேஷன் அரிசி… 

naveen santhakumar