இந்தியா

2021 ஜூன் வரை இலவச ரேஷன் அரிசி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

அடுத்த ஆண்டு ஜூன் (2021 June) மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM Garib Kalyan Anna Yojana) திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

ALSO READ  தலைநகரில் பரபரப்பு… கேட்பாரற்று கிடந்த பையில் காத்திருந்த அதிர்ச்சி!

முன்னதாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்தை நவம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலமாக நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ கொண்டைக் கடலையும் (Channa) சேர்த்து வழங்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மராத்தியை கட்டாய பாடமாக்க திட்டமிடும் மஹாராஷ்டிரா அரசு

Admin

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்..

Shanthi

Parimatch On Line Casino Polska Bonus +100% Za Pierwszy Depozyt

Shobika