இந்தியா

ராகுல் காந்தி, கனிமொழி, வெங்கடேசன் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. அனால் ஒருநாள் கூட நாடாளுமன்றம் முழுமையாக செயல்படாத சூழல் இருந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இதை ஒன்றிய அரசே பெகாசஸ் மூலம் நடத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

ALSO READ  பூ விற்கும் பெண்ணுக்கு ரூ.30 கோடி பரிசா?

பெகாசஸ் விவகாரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். விவாதத்தின் போது பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேஸ் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒன்றிய அரசு கேஸ் விலை உயர்வு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

ALSO READ  2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

பெகாசஸ் விவகாரம்,கேஸ் விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி, வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்தீஷ்கரில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்..

Shanthi

அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் !

News Editor