உலகம்

பெத்தகல்லு பெத்தல லாபம்; அடித்தது யோகம் 700 கோடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்று கூறுவார்கள். ஆனால், இலங்கையில் ஒருவர் கிணறு தோண்டும்போது அவர் வாழ்க்கையே மாறி மெகா கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

நமது அண்டை நாடான இலங்கையில் ரத்தினங்கள் அதிகம் காணப்படும் பகுதி ரத்தினபுரா. இந்த ரத்தினபுரா பகுதியை சேர்ந்த மிகப்பெரிய வைர மற்றும் ரத்தின வியாபாரி கமாகே.

மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான இவரது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது மிகப்பெரிய கல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த தகவலை கமாகேவிடம் தொழிலாளர்கள் கூற கல்லா அட ஏதும் பாறாங்கல்லா இருக்கும்டா, தூக்கி போட்டு வேலைய பாருங்கடானு கமாகே திரும்ப சொல்ல, அட கமாகே சார் இங்க வந்து கொஞ்சம் பாருங்க பக்க பளபளன்னு ஒரு தினுசா இருக்குனு சொல்ல பொய் பார்த்தார் கமாகே.

ரத்தின வியாபாரியான கமாகேக்கு தெரியாதா என்ன, oh my god இது உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் ஆச்சே பரவசத்தில துள்ளி குசிச்சாறு நம்ம கமாகே.

ALSO READ  கொரானா தொற்று நெருக்கடியால் கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரிப்பு - ஐ நா தகவல்

டே இந்த ரோடு என்ன விலை , இந்த தெரு என்ன விலை, அட இந்த ரத்தினபுரா எவ்ளோடா விலை னு ஒரே குஷி தான் நம்ம கமாகேவுக்கு

இருக்காதா பின்னே வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் எடை 510 கிலோ, 25 லட்சம் காரட், இதோட மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.745 கோடி இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

நம்ம கமாகேவும் சாதாரண ஆள் இல்லங்க, மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரி. இது எங்க தாத்தா பொதச்சி வச்ச கல்லுடானு சொல்லாம, சார் எனக்கு ஒரு கல்லு கிடைச்சிருக்கு சார்னு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார் குட் பாய் கமாகே.

ALSO READ  மருத்துவ பணியாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 12 வயது சிறுவன் ......

ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதி இலங்கையின் ரத்தினத் தலைநகரம் என்று கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் பல விலை மதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் கடந்த காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

நீலக்கற்கள் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னணியில் உள்ள நாடு. கடந்த ஆண்டு மட்டும் இலங்கை 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரத்தினங்கள், பட்டை தீட்டிய வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

எது எப்படியோ இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், ரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும், சோ இதன் விலையும் தாறுமாறா அதிகரிக்கும் என்கிறார் இலங்கையின் தேசிய ரத்தினங்கள், நகைகள் ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்கே.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்

naveen santhakumar

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்த பிரேசில் உயர் அதிகாரிக்கு கொரோனா காய்ச்சல்……

naveen santhakumar

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்….

naveen santhakumar