தமிழகம்

பெட்ரோல் விலை குறைப்பு- இன்று நள்ளிரவு முதல் அமல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படுவதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

TN Budget 2021| பெட்ரோல் மீதான வரியை ₹3 அளவு குறைக்கிறது அரசு

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

ALSO READ  மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடர் மழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

naveen santhakumar

அம்மா உணவகம்…..மக்களிடமிருந்து நிதி திரட்ட ஏற்பாடு…..

naveen santhakumar

தமிழக பட்ஜெட் 2020… பெண்களுக்கு இவ்வளவு திட்டங்களா?

Admin