இந்தியா

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிர மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் ஹரி பாலாஜிக்கு மத்திய அரசின் அதி வீர தீர செயலுக்கான விருது கிடைத்துள்ளது

இந்த அதி வீர தீர செயலுக்கான விருது பெறுவது என்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர்களுக்கு தான் இந்த அதி தீவிர வீர செயல் விருது கிடைக்கும் .

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிவரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஹரி பாலாஜிக்கு இந்த விருது 2 வது முறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ  История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe
Home | Amravati Rural Police

ஹரி பாலாஜிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தவர். பின்பு யு .பி.எஸ்.சி தேர்வு எழுதி 2013ம் ஆண்டு காவல்துறை பணியில் மகாராஷ்டிர மாநிலத்தில் பொறுப்பேற்றார்.

ஹரி பாலாஜிக்கு தொடர்ந்து நக்சல்கள் எதிர்ப்பு நடவடிக்கை தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். 60 என்கவுண்டர் சம்பவங்களில் 174 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்ட்டார்கள். இச்சம்பவம் மே 2017 2019 ஜூலை முடிய நடைபெற்றதாகவும் 2018 ஆம் ஆண்டு மட்டுமே 50 நக்சல் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

ALSO READ  மழை நிவாரணம் ரூ.5000… இன்று முதல் விநியோகம் தொடக்கம்!

அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஹரி பாலாஜியின் வீரதீர செயலைப் பாராட்டினார்கள். 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் குடியரசு தினவிழாவில் ஹரி பாலாஜிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வீரதீர செயல்களை கௌரவிக்கும் பதக்கத்தை வழங்கியதும் தற்போது இரண்டாவது முறையாக சுதந்திர தின விழாவில் மீண்டும் அவருக்கு வீர தீர செயல் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி!

Shanthi

திருப்பதி பக்தி டிவிக்கு சென்னை தொழிலதிபர் ரூ. 2.10 கோடி நன்கொடை… 

naveen santhakumar

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

News Editor