தமிழகம்

காவல்துறையிலும் 8 மணி நேர பணி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:

கரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அம்மனுவில் தமிழக காவல்துறையில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், காவலர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.

தமிழக காவலர்களின் குறைகளை களைய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட வேண்டும், போலீசாருக்கு 8 மணி நேர பணி முறையை விரைவில் பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் ளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  "ஒன்றிய அரசு" தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
Tamil Nadu Chennai August 11, 12 Highlights: 8 police personnel from TN  among 152 officers awarded HM's medal for excellence in investigation |  Cities News,The Indian Express

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காவலர்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது. இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. 3 மாதத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த குழுவில் மன நல நிபுணர்கள், உளவியலாளர் , சமூக ஆர்வலர், போலீசார், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

காவலர்களை 3 ஷிப்டுகளில் பணியாற்ற அனுமதிப்பதோடு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேலூரில் மீண்டும், மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

naveen santhakumar

பெரியார் பிறந்தநாள் சமூகநீதிநாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் …!!

Admin

கோவை மாவட்டதில் கலப்பட தேயிலை பறிமுதல்

Admin