தமிழகம்

சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் எனும் உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாடு முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவம் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் ழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

ALSO READ  27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி…!

நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட்தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனம் தளராது இருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்பிற்காக தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம் சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

ALSO READ  தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்குவோம். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா – புது ரூட்டில் ஜெயிலுக்குள் கஞ்சா சப்ளை!

naveen santhakumar

சினிமா பாணியில் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை கடத்திய மர்ம கும்பல்:

naveen santhakumar

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar