இந்தியா

வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது : ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும் எதிர்வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது எனவும் அறிவித்து நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த ஒன்றிய அரசு தடை விதித்தது.

Indian government BANS bull-bars on cars and SUVs: Action to start soon -  Driving in India - TriFOD

இந்த நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘’பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்தனர்.

ALSO READ  துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் பாதுகாப்பு மிக அவசியம். பம்பர் பொருத்திய வாகனங்களின் ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். பொதுமக்களின் நலன் கருதியே ஒன்றிய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Madras HC puts its mandatory bumper-to-bumper insurance order on hold - Law  News

இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றிய அரசின் உத்தரவை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மாநில அரசுகள் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet APK download Android və iPhon Hackers In inTrusion Laboratory

Shobika

பிகாரின் குந்தன் குமார் எனும் மாணவனின் பெற்றோர்களா….! பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியும், நடிகை சன்னிலியோனும்..!

News Editor

உலகத் தரத்தில் மாறப்போகும் டெல்லி ரயில் நிலையம்

Admin