உலகம்

சீனாவில் கடும் மின் தட்டுப்பாடு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்

சீனாவில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

China manufacturing slows as supply shortages roil Asia industry | Reuters

தொழிற்சாலைகள் மட்டுமல்லாது வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

ALSO READ  ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது

கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் ஒருவார காலத்திற்கு உற்பத்தியை நிறுத்திவைக்குமாறு சீனா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மின் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ALSO READ  மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:
Southern China Faces Power Shortages and Factory Cutbacks - Caixin Global

சீனாவின் வடகிழக்கு நகரமான லியோயாங்கில், மின்சாரம் தடைபட்டதை அடுத்து, உலோக வார்ப்பு தொழிற்சாலையில் காற்றோட்டம் நிறுத்தப்பட்டதால், 23 பேர் விசவாய்வு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனா PPE-களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பதாக வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு.. 

naveen santhakumar

ஆபத்தான கட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்…. 

naveen santhakumar

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

naveen santhakumar