தமிழகம்

அக்.4 முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அக்டோபர் 4-ஆம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி முதலாமாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. 

கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ALSO READ  1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - முதலவர் மு.க ஸ்டாலின்.

அந்த அறிவிப்பில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு சிலை!

Shanthi

தோ்வுக் கட்டணத்தை இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு..

Shanthi

இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன்-ரஜினிகாந்த்

Admin