தமிழகம் மருத்துவம்

தருமபுரியில் தாய், சேய் நல சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தர்மபுரி சென்றார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல் அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நான்கு தளங்களாக 5,060 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தை அவர் பார்வையிட்டார். இந்த பிரிவு ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிட வளாகத்தில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற 95 படுக்கைகள் உட்பட மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ALSO READ  கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு

இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதல் அமைச்சர் வழங்கினார்.

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது…!

News Editor

கொரோனா உயிரிழப்பை தடுப்பதற்கான தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிப்பு….

naveen santhakumar

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – உச்சக்கட்ட உஷாரில் தமிழகம்

naveen santhakumar