உலகம்

சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் – பள்ளிகள் மூடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனாவில் மீண்டும் புது வகை கொரோனா தொற்று பரவுவதை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Flights Cancelled, Schools Closed as China Battles Fresh Covid Outbreak

சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது.

ALSO READ  ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுடனான எல்லையை திறக்கிறது கனடா :
China Coronavirus: China cancels over 1,200 flights, shuts schools over new  coronavirus outbreak in Beijing | World News - Times of India

கொரோனா பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

China curtails movement, closes schools, cancels flights to contain  resurgent Covid-19

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ  இத்தனை அறிகுறிகளுடன் கொரோனாவா...????

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா சற்று குறைந்ததால் இயல்புநிலைக்கு திரும்பிய சீன மக்கள், மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் அறிந்ததும் வேதனை அடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்…!

Shobika

உலகளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

News Editor

தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

naveen santhakumar