தமிழகம்

காஞ்சிபுரத்தில் தேர்தல் அதிகாரி திடீர் உயிரிழப்பு – தேர்தல் நிறுத்தி வைப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணைத் தலைவர் பதவிக்காக வார்டு உறுப்பினர்களிடம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஹரி என்பவர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டு ஆசிரியர் ஹரி மயங்கி விழுந்தார்.

ALSO READ  கொரோனாவால் தொடர்ந்து உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்; இழப்பீடு அறிவித்த முதல்வர் !
image

இதையடுத்து ஊர்மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியர் ஹரி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தாங்கி ஊராட்சியில் நடைபெற்று வந்த மறைமுகத் தேர்தல் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறை:

naveen santhakumar

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Shanthi

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

naveen santhakumar