தமிழகம்

தமிழகத்தில் மழை, வெள்ள அபாயம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமி­ழ­கத்­தில் சென்னை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­லும் ஐந்து நாட்­க­ளாக மழை பெய்து வரும் நிலை­யில் வங்­கக்­க­ட­லின் தென்­கி­ழக்­கில் உருவான காற்­ற­ழுத்­தத் தாழ்வு பகுதி நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் ஆழ்ந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யாக வலு­வ­டைந்­தது. காலை 8.30 மணி­ய­ள­வில் அது தெற்கு வங்­கக்­க­ட­லின் மத்திய பகுதியில் மையம் கொண்­டி­ருந்­தது.

கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு ||  3048 Crore Flood Relief Fund For Kerala

இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் இந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, நாகப்­பட்­டி­னம், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், மயி­லா­டு­துறை மாவட்­டங்­களில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு நேற்­றும் இன்­றும் விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ALSO READ  அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ?- அமைச்சர் பொன்முடி …!

மேலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வட­க­ட­லோர மாவட்­டங்­கள், புதுச்­சேரி, காரைக்­கால் பகு­தி­களில் இன்று (நவம்­பர் 11) காலை முதல் தரைக்­காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்­தில் வீசக்­கூ­டும் என எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்டு உள்­ளது.

ALSO READ  நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு ஓ.பி.எஸ். கடிதம்…!

எனவே, சென்னை மக்­கள் வீட்­டை­விட்டு வெளி­யே­று­வ­தைத் தவிர்க்­கு­மா­றும் தேவை­யான உண­வுப்­பொ­ருட்­களை வாங்கி வைத்­துக்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் ககன்­தீப் சிங் பேடி கூறினார்.

“மீட்­புப் பணி­க­ளுக்­காக 53 பட­கு­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்டு உள்­ளன. தாழ்­வான பகு­தி­களில் தேங்­கி­யுள்ள வெள்­ள­நீரை வெளி­யேற்ற 570 ‘மோட்­டார் பம்பு’ களுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது,” என்றார் அவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது

News Editor

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைந்தார்:

naveen santhakumar

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் – 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் …!

naveen santhakumar