இந்தியா

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- அறிவித்தார் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,

அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

ALSO READ  பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை செய்த இளைஞர்… SP உட்பட 11 போலீஸார் சஸ்பெண்ட்....

சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.

ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

ALSO READ  கொரானா தொற்று சூழலில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும். இவர்கள் தங்களின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் கூறினார்.

பிரததமர் மோடியின் இந்த அறிவிப்பை பல்லவேறு விவசாய அமைப்பினர், பல்வேறு கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர். முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டனர் அமரீந்தர்சிங் , மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே உ.பி, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அச்சத்தால் மட்டுமே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில்வே ஸ்டேஷனில் தோப்புக்கரணம் போட்டால் இதெல்லாம் சும்மா கிடைக்குமா ???

naveen santhakumar

Azərbaycanda rəsmi say

Shobika

பிளாட்பார்ம் விலை அதிரடி உயர்வு… முக்கிய ரயில்கள் ரத்து- ரயில்வே அறிவிப்பு….

naveen santhakumar