தமிழகம்

மாதம் ரூ.1,000 உதவித் தொகை! உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் செயல்பட்டுவருகிறது.

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை! உடனே விண்ணப்பிக்கலாம்!!

இதன்மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்து போன்ற திறன் பயிற்சிகள் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளது.

ALSO READ  ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை! உடனே விண்ணப்பிக்கலாம்!!

அதன்படி இந்தாண்டு 27ஆவது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்புப்பயிற்சி திட்டம் டிசம்பர் முதல் தேதியிலிருந்து அடுத்த 11 மாத காலக்கட்டத்திற்கு நடைபெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட 27 வயதிற்கு உட்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த திறன்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்யைில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதனையடுத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை அஞ்சல் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

ALSO READ  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்….

அனுப்பவேண்டிய முகவரி,

துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 3ஆவது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை.

மேலும் பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரன் மறைவு!

naveen santhakumar

அர்ஜுனா விருது பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…

Admin

ஜவுளிக்கடையின் புதிய யுக்தி….ரோபோட் மூலம் வாடிக்கையாளர்கள் வரவேற்பு:

naveen santhakumar