தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா (45). இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.

Srivilliputhur-college-professor-arrested-for-harassing-his-student-sexually

இந்நிலையில் மாணவி ஒருவருக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ  சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி:

இதனைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய தமிழ்ச்செல்வன், அந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

ALSO READ  குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக்
 மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்': 'காமுக' பேராசிரியர் கைது

இதை தொடர்ந்து பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி, 2 நாட்களாக, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து பேராசிரியர் தமிழ்ச்செல்வன் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar

ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்- தமிழக அரசு… 

naveen santhakumar

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வீட்டில் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா…

naveen santhakumar