தமிழகம்

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மீத்தேன், நியூட்ரினோ திட்டம், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எட்டு வழிச்சாலை, மீத்தேன் போராட்ட வழக்குகள் வாபஸ் - முதல்வர் அறிவிப்பு!

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி ளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு திமுக ஆட்சிக்கு வந்திருப்பது பெருமையாக இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள செய்யாறு, திண்டிவனத்தில் 22 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

ALSO READ  தொடரும் போராட்டம்; மத்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்த விவசாயிகள்..!

கொரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப் பெறப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

ALSO READ  "எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்" ஜோதிமணி எம்.பி கருத்து !

8 வழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து சேலத்தில் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புலி வேட்டையில் இறங்கிய நாட்டுநாய்…!

News Editor

தோசை சுட்டுத் தராதது ஒரு குத்தமா???? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!!!!!!

naveen santhakumar

முழு ஊரடங்கு; 105 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி பொருட்கள் !

News Editor