அரசியல்

இன்னும் ஓரிரு நாட்கள் தான்… விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட்நியூஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண நிதி ஓரிரு நாளில் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், உள் கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் கூறினார்.

ஆளுநரின் உரை என்பது அரசின் கொள்கை, செயல்திட்ட அறிக்கையே என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழக ஆளுநரின் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. ஆளுநரின் பாராட்டு உரை என்பது மக்களுக்கான பாராட்டு உரை எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

ALSO READ  தமிழ்நாடுநீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ...!

பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றி உள்ளோம். மக்களிடம் பல மடங்கு நம்பிக்கையை திமுக அரசு பெற்றுள்ளது என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உங்களின் அரசாக மட்டுமல்லாமல் உயிர் காக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

கடும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம் என முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது எனவும் முதல்வர் கூறினார். விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண நிதி ஓரிரு நாளில் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு- நடிகை குஷ்பு…

naveen santhakumar

சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் தீடீர் ஆலோசனை !

News Editor

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிகாலையில் கைது..

naveen santhakumar