அரசியல்

கே.பி. அன்பழகன் வீட்டில் திடீர் ரெய்டு… உண்மையை உடைத்த ஈபிஎஸ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் வீடு மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கே.பி. அன்பழகன் அமைச்சராக இருந்த போது வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீதும் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  அதிமுக பாஜகவின் துணையோடு கொள்ளையடித்து வருகிறது; R.S.பாரதி குற்றச்சாட்டு !

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தருமபுரியில் மட்டும் 41 இடங்களிலும், சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் 16 இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.2.65 கோடி பணம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது .

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்றும் குற்றச்சாட்டினார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.

ALSO READ  முதல்வர் ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து !

போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த காரணத்தால் தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. கடந்த எட்டு மாத காலத்தில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

62 இடங்களில் வெற்றி… டெல்லி தேர்தலில் அசத்திய ஆம் ஆத்மி…

Admin

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் கமல்..!

News Editor

விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – திமுக கூட்டணி அறிவிப்பு 

News Editor