உலகம்

கண் சொட்டு மருந்து – இலங்கை அரசு புகார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு இந்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது தொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக பார்மெக்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share
ALSO READ  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் ஒரு நிமிடம் தாமதம் : சம்பளத்தில் ரூ.37 பிடித்தம் – ஜப்பான் ரயில்வே துறை மீது வழக்கு

News Editor

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்… பிரிட்டன் மற்றும் ஜெர்மனி புதிய திட்டம்…

naveen santhakumar

Google,Facebook,Twitter…..CEOக்கள்….. உங்களையெல்லாம் எவன் வேலைக்கு எடுத்தான்?????

naveen santhakumar