இந்தியா

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கேரளா சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Image result for சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

கேரளாவில் நேற்று 3 – வது நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் இதனை மாநில பேரிடர் என்று அறிவித்தார்.

ALSO READ  மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணுஆயுதம்:மேற்கு வங்க ஆளுநர் சர்ச்சைப் பேச்சு
Image result for மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ்

கேரளாவில் உள்ள மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகளும் கடந்த மாதம் சீனாவின் வுகான் நகரிலிருந்து திரும்பிய மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் வடக்கு கேரளாவின் காசர்கோடு, மத்திய கேரளாவின் திருச்சூர் மற்றும் தெற்கு கேரளாவின் ஆலப்புழா ஆகிய மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Image result for மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ்

வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 28 தனி வார்டுகள்  தயார் செய்யப்பட்டுள்ளன. பணிகளுக்காக 40,000 க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள், அரசு ஊழியர்கள், கீழ் நிலை  ஊழியர்கள்  தயாராக உள்ளனர். 

ALSO READ  பொதுமக்களுக்காக ஹேண்ட் சேனிடைசர்கள் மற்றும் முக கவசங்களை தயாரிக்கும் கேரளா அரசு....

வெளிநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாபயணிகளும் கேரளா செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

Image result for கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள்

இதன் காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கஞ்சா கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கிய நபர்; நுரையீரலில் சிக்கிய 20 சென்டிமீட்டர் கத்தி… 

naveen santhakumar

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் மாநில அரசு !

News Editor

ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமனம்

News Editor