சினிமா தமிழகம்

வருமான வரித்துறைக்கு நன்றி சொன்ன அஜித்.. இணையத்தில் வைரலாகும் அறிக்கை.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய், ‘பிகில்’ படத்தை தயாரித்த AGS சினிமாஸ் நிறுவனம் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் வருமான வரித்துறை சோதனை குறித்து கூறிய கிண்டல் ஸ்டேட்மென்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அந்த ரைடு குறித்து கூறிய அஜித்குமார்:-

ALSO READ  காருக்குள் அழுதாரா விஜய்; பேட்டி அளித்த IT அதிகாரி.

“வீட்டில் வைத்த பொருட்கள் பாதி எங்கே வைத்தோம் என தெரியாமல் இருந்தோம். வருமான வரித்துறை உதவியால் காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மீண்டும் கிடைத்துவிட்டது;

இதனால் எனக்கு மகிழ்ச்சியே எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை; ஆனால் வரி எய்ப்பு தொடர்பான ஏதும் கண்டறியப்படவில்லை; மேலும் நான் முறைதவறி எதையும் வீட்டில் வைத்திருக்கவில்லை” என்றும் ஜாலியாக கூறினார்.

ALSO READ  'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

இதேபோல் மற்றொரு முறை அவர் அளித்த பேட்டியில்:-வெற்றி பெற்ற மனிதர்கள் மீது வரிகளை விதிப்பதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தால் நாட்டின் பிரச்சனைகள் தீரும்’ என்று கூறினார்.

இந்த இரு பேட்டிகளையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதனிடையே இந்த சோதனை மூலமாக கணக்கில் காட்டப்படாத பணம் 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் யுவன் !

News Editor

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!

naveen santhakumar

33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்

naveen santhakumar