சினிமா

‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பலப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கொலைகாரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அ தனை தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் கோடியில் ஒருவன். இந்த படத்தில்  அவருக்கு ஜோடியாக  ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசமைக்கிறார்.

படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீபாவளி அன்று படத்தின் ஃபஸ்ட்  லுக் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனையடுத்து நேற்று  நடிகர் விஜய் ஆண்டனி “கோடியில் ஒருவன்” படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக  பகிர்த்துள்ளார். அதில், வரும் ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 2.1 மணிக்கு படத்திலிருந்து  ஒரு தகவல் வெளியாகவுள்ளது என்றும், அது என்ன என்று உங்களால் யூகிக்கமுடிகிறதா என குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ  பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்த பிரபல ஆடைவடிவமைப்பாளர்..! 

இந்நிலையில் தற்போது அது என்ன தகவல் என்று படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி  ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 2.1 மணிக்கு கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

Admin

அடியே..! அழகே…! – ரித்விகாவின் நியூ போட்டோஷூட்

Admin

போர்வீரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்

Admin