ஜோதிடம்

Fair& Lovely யிலிருந்து ‘Fair’ வார்த்தையை நீக்கியது ஹிந்துஸ்தான் யூனிலீவர்ஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் பிரபலமான ஃபேர்னஸ் கிரீமான Fair& Lovely-லிருந்து Fair என்ற வார்த்தையை நீக்குவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ள செய்தியில்:-

எங்கள் நிறுவனத்தின் ஃபேர்னஸ் க்ரீம் மான Fair& Lovely இலிருந்து Fair என்ற வார்த்தையை நிற ரீதியிலான பாகுபாட்டை குறிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்ததையடுத்து இந்த வார்த்தையை நாங்கள் நீக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் நிறபாகுபாட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தனது பொருட்களில் இனிமேல் Clean and Clear Fairness என்ற வாசகம் இடம் பெறாது என்று கூறியுள்ளது. குறிப்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசிய நாடுகளில் விற்பனை செய்யும் பொருட்களில் இந்த வாசகம் இடம் பெறாது என்று கூறியுள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசியை தயாரித்த ஜான்சன் & ஜான்சன்..

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு Fair& Lovely முகப்பூச்சு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் லோரல், கார்னியர் போன்று பல்வேறு முகப்பூச்சு கிரீம் நிறுவனங்கள் இருந்தாலும் Fair& Lovely முகப்பூச்சு இந்தியா முழுவதும் பிரபலம். Fair& Lovely  இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களிலும் சென்றடைந்த முகப்பூச்சு ஆகும்.

இந்நிறுவனத்தின் விளம்பரங்களில் தீபிகா படுகோன், கட்ரீனா கைஃப், சோனம் கபூர், பூஜா ஹெக்டே, யாமி கவுதம் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நடிகைகள் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "தீர்க்க சுமங்கலி பவ" என்றால் என்ன...?

இது போன்ற அழகு சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தான் கருமையான தோல் அழகற்றது இல்லை என்று தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து வந்தன.

இது போன்ற நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களில் கருமையான தோல் (Dark Skin) கொண்டவர்கள் அழகற்றவர்கள் என்றும் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு என்றும் வெண்மை நிறத்தில் இருந்தால் தானாக தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் என்றும் வெண்மை நிறம் ஆளுமை திறன் மிக்கது என்றும் தொடர்ந்து மக்களின் மனதில் வெண்மை மேன்மையின் அடையாளம் என்ற எண்ணத்தை விதைத்து வந்தன. தற்பொழுது இந்த நிறுவனங்களே தங்கள் நிறுவன பொருட்களிலிருந்து ஒரு சில வார்த்தைகளில் நீக்குவதன் மூலமாக நிறப்பாகுபாடுகளை களைந்திட முடியும் என்று நம்புவது வேடிக்கையே.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :

Shobika

இந்திய மாணவிக்கு நாசா வழங்கிய கௌரவம்…

naveen santhakumar

‘ஓ மை கடவுளே’ பாராட்டிய மகேஷ் பாபு- மகிழ்ச்சியின் உச்சத்தில் அசோக் செல்வன் & கோ… 

naveen santhakumar