சினிமா

பறக்கும் விமானத்தில் வெளியாகும் சூர்யா பட பாடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் பாடல் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ALSO READ  அருண் விஜய் 31 படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான வெய்யோன் சில்லி பாடலை பறக்கும் விமானத்தில் வெளியிட நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 13ஆம் தேதி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானத்தில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில ஜோக்கர்கள் எனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் செய்து விட்டனர் -நஸ்ரியா

naveen santhakumar

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar

கார் விபத்து: யாஷிகா அளித்த வாக்குமூலம்!

naveen santhakumar