சினிமா

மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆரம்ப காலகட்டத்தில் ‘அட்டக்கத்தி’ உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பிறகு இவர் நடித்த ‘காக்க முட்டை, பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பட வாய்ப்பை அதிகரித்துக் கொடுத்தது.

நான் ஹீரோயின் ரோல் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் அம்மா, அக்கா, தங்கை, மகள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்தார். ‘கனா’ படத்திலும் தனது நடிப்பை மக்கள் வியக்கும் படி கொடுத்திருந்தார்.

ALSO READ  ரசிகர்களுக்கு அஜித் போட்ட கண்டிஷன்....

அதே போல சமீபத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “வொர்ல்ட் பேமஸ் லவ்வர்” படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  "அந்தகன்" படத்தில் இணைந்த பிரபல நடிகை !

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்தநாளை ‘ஹோப்’ தொண்டு நிறுவனத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுடன் கொண்டாடியுள்ளார். அங்கு கேக் வெட்டி, அதனை அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டி விட்டு தனது பிறந்தநாளை ஆனந்தமாகக் கழித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆதித்ய வர்மா படத்தில் விக்ரம் நடித்தாரா… !

Admin

கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்; நடிகை கீர்த்தி சுரேஷ் !

News Editor

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியானது சூப்பர் அப்டேட்!

naveen santhakumar