சினிமா

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. பின்னர், கொரோனா பரவலின் வேகம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படத்தினை பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று  திரையரங்கில் வெளியிட படக்குழுத்  திட்டமிட்டுள்ளதாகத் அண்மையில் செய்திகள் வெளியாகியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  சர்ச்சையை கிளப்பும் ஃபேமிலி மேன் 2 தொடர்; விளக்கமளித்த சமந்தா !

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளர். அதில், ” “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போலவே நானும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி !

News Editor

மொட்டை ராஜேந்திரன்-2 விற்கு டும்..டும்…டும்….

naveen santhakumar

நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்…

naveen santhakumar