சினிமா

மூன்று தேசிய விருது பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வனிதா விஜயகுமார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம்  மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது. படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ பட இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த், கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  ராபின்ஹூ்ட் படத்தில் ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

இதனையடுத்து “அந்தகன்” படத்தில் இருந்து இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் விலகினார். அதனையடுத்து இப்படத்தை நடிகர் பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்தகன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

#tamilthisai #tamilcinema #tamilmovie #cinema #andhadun#andhagan #prasanth #simran #vanithavijayakumar #kollywood #thiyakarajan #simran #kolltwoodcinemas #trendingcinemas


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..!

News Editor

சிம்புவின் படத்தை வெளியிடமாட்டோம்; திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை !

News Editor

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor