சினிமா

வெளியானது கபடதாரி படத்தின் டிரைலர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் “கபடதாரி”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். அதனையடுத்து படத்த்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஜெயா பிரகாஷ், சதிஷ் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கும் இப்படத்தினை தனஞ்சயன் தயாரித்துள்ளார்.

 
கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுப்போனது. அதனையடுத்து படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவாக படப்பிடிப்பு  நடத்தப்பட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி  நிறைவு செய்யப்பட்டது. பின்னர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முழுவீச்சுடன் நிறைவு செய்துள்ளது படக்குழு.


அதனையடுத்து “கபடதாரி” படத்தினை திரையரங்கில் வெளியிட தீவிரம் காட்டி வந்த படக்குழு. அண்மையில் கபடதாரி திரைப்படம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்தன்று திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் படகுழு தற்போது கபடதாரி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது. 

ALSO READ  த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் இணையும் பூர்ணா !

#kabadaathari #sibiraj #tamilmovie #tamilthisai #nanthitha


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“செல்லம்மா” பாடல் யூடியூபில் புதிய சாதனை !

News Editor

ராக்கி பட வெளியிட்டு உரிமையை கைப்பற்றியது விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ்

News Editor

இப்படி செய்யும் இயக்குனர்கள் முன்னேறவே முடியாது: பிரபல இயக்குனர் பேச்சு

Admin