சினிமா

வலிமை ரிலீஸ் தள்ளிவைப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது… காரணம் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

ALSO READ  வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு நேற்று கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதை அடுத்து வலிமை படம் திரைப்படம் வெளியாகுமா?என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது. அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான ‘வலிமை’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!” என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஒத்த செருப்பு’ படத்தால் ஹாலிவுட்டில் நடிக்கப்போகும் நடிகர் பார்த்திபன்

Admin

‘மாநாடு’ படத்தில் இணைந்த கூக் வித் கோமாளி புகழ் !

News Editor

ரஜினி,விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை

Admin