சினிமா

நடிகை “ஆர்யா பானர்ஜி” வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆர்யா பானர்ஜி இவர், ‘டர்ட்டி பிக்சர்ஸ்’, ‘எல்.எஸ்.ஏ.டி’ போன்ற படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் பிரபலமானார், 33 வயதே நிரம்பிய இவர் , கொல்கத்தாவில் உள்ள  அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.


Arya banerjee

இன்று காலை அவரது உதவியாளர் வந்து கதவைத் தட்டும் போது, நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படவில்லை.  ஃபோன் மூலம் தொடர்புகொள்ள முயன்றும் முடியாததையடுத்து சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள வீட்டிற்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் , கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆர்யா பானர்ஜி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர்  அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

ALSO READ  மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘காதலர் தினம்’ பட இயக்குனர் கதிர் :

முதற்கட்ட விசாரணையானது தற்போது நடைபெற்று வருவதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், பாலிவுட்  திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது மாஸ்டர் படத்தின் அப்டேட் ..!

News Editor

விஜய் சேதுபதி இணைந்ததால் வெற்றிமாறன் படத்தில் மாற்றம் !  

News Editor

ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது மீண்டும் மற்றொரு புகார் :

Shobika