சினிமா

விஜய் சேதுபதி இணைந்ததால் வெற்றிமாறன் படத்தில் மாற்றம் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக பவனி ஸ்ரீ நடித்து வருகிறார்.  எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை  மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி வாத்தியராகவும், சூரி போலீசாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே வெற்றிமாறன் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. ஆரம்பத்தில் விடுதலை படத்தை தமிழ் மொழியில் மட்டும் வெளியிடுவதாக இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி இணைத்துள்ளதால் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. விஜய் சேதுபதிக்கு மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் இந்த முடிவை பட தயாரிப்பாளர் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகை சுனைனா !

News Editor

“ஏன் குடுப்பதினார் வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை”; அறிக்கை வெளியிட்ட சிம்பு..!

News Editor

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

naveen santhakumar