சினிமா

வெளியாகியது தனுஷ் செல்வராகவன் கூட்டணி படத்தின் டைட்டில் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன.

ALSO READ  "பூமி" படத்தின் டிரைலர் வெளியீடு..!

இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ பெயரிடப்பட்டுள்ளது.

ALSO READ  வலிமை எந்த மாதிரியான படம்; அப்டேட் கொடுத்த போனி கபூர் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கர்ணன்’ குரலை விரைவில் கேட்பீர்கள்; மிரட்டும் புகைப்படத்துடன் தனுஷ் ட்வீட் !

News Editor

2020 ல் டாப் 10 ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த நடிகர்கள், நடிகைகள்…

News Editor

விசாவிற்காக தான் கல்யாணம்-ராதிகா ஆப்தே:

naveen santhakumar