சினிமா

திரௌபதி பட இயக்குநரின் அடுத்த படைப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

இதனிடையே மோகன் ஜி இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டிருப்பதாகவும், ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

ALSO READ  ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமருக்கும்,மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து ரஜினி காந்த் அறிக்கை !

News Editor

தப்பு பண்ணிட்டேன்: ஃபீல் பண்ணும் சிம்பு..!

naveen santhakumar

‘அண்ணாத்த’ யாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி..

Admin