இந்தியா

கேரளாவை அச்சுறுத்தும் புதிய “வைரஸ்” 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது “ஷிகெல்லா” என்ற புதிய வைரஸ் தொற்று பரவிவருகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் வீரியம்  சற்று குறைந்து இருந்தாலும் பல மாநிலங்களில் கொரோனா  வைரஸ்   இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. கேரளாவிலும் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனையடுத்து  அங்கு கொரோனா கட்டுப்பட்டு  விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.  

மேலும் நாள் ஒன்றுக்கு 2000 பேர் வரை மட்டுமே சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் “ஷிகெல்லா”  என்ற புதிய வகை வைரஸ் தொற்று பரவுகிறது. மனித கழிவு, அதில் கலக்கும் தண்ணீர் மூலம் இவ்வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  இந்தியாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்... 

கொரோனா  போன்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவருக்கு இவ்வைரஸ் பரவி வருவதால் கோழிக்கோட்டில் வசித்துவரும் மக்கள் பீதியிலுள்ளனர். இந்நிலையில்  “ஷிகெல்லா” வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 11 வயது சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து  50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“ஷிகெல்லா” வைரஸ் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும்  தாக்கி வருவதால் வீடு வீடாக சென்று சுகாதாரத் துறையினர்  நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Glory Casino Online Kayıt: Yeni Oyuncular Için 300$ Ilk Giriş Bonus

Shobika

2,500 CC திறன் கொண்ட புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்

Admin

பணக்கார நாடாக மாறும் இந்தியா- 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar