சினிமா

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 
‘இந்த நிலையில்தான்  இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ‘தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.  

ALSO READ  படமாகிறது சக்திமான் தொடர்:

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து  தமிழ்த் திரை ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியத் திரை ரசிகர்களும் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இது குறித்தான வாழ்த்துப் பதிவுகள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. 


இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால், படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த கர்ணன் படக்குழு !

News Editor

பவுன்ராஜின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

News Editor

“காதல் கண் கட்டுதே” – நடிகை ரெபா மோனிகா ஜான் க்யூட் போட்டோஸ்

Admin