சினிமா

படமாகிறது சக்திமான் தொடர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷன் சேனலில் 1997-2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டது. மொத்தம் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன.

இந்த தொடரில் சக்திமான் என்ற கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். சக்திமான் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது அதிலும் 90’ஸ் கிட்ஸ் இத்தொடரின் அடிமையென்றே கூறலாம். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதனை முகேஷ் கன்னா தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “சக்திமான்தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ. ஒரு தலைமுறையே சக்திமானை பார்த்து வளர்ந்து இருக்கிறது. சக்திமானை ‘சூப்பர் ஆசான்’ என்று அழைப்பேன். தற்போது சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம். இதன் மூலம் எனது கனவு நனவாவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. சக்திமான் இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை” என்றார். இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.இதற்காக நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.


Share
ALSO READ  யாரடி நீ மோகினி சீரியல் வில்லிக்கு விரைவில் கெட்டிமேளம்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அருண் விஜயின் சினம் படத்தின் டீசர் வெளியீடு !

News Editor

ரசிகர்களை உற்சாகப்படுத்த ‘மாஸ்டர்’ படத்தின் இறுதியில் ப்ளூப்பர்ஸ்:

naveen santhakumar

தொடங்கியது “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு…!

News Editor