சினிமா

“கே.ஜி.எஃப் 2”  படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

தற்போது கேஜிஎப் 2 படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. தற்போது படக்குழு  படத்தின்  கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி இருந்த நிலையில் படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில்தான் கேஜிஎப் 2 படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில் “ஒருவழியாக அந்த நாள் வந்துவிட்டது, கே.ஜி.எப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பை கூடிய சீக்கிரத்தில் நிறைவுசெய்ய இருக்கிறோம், இந்தத் தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்ச்சி அடைகிறோம், எங்கள் அற்புதமான ரசிகர்களுக்கு டிசம்பர் 21 அன்று நாங்கள் வழக்கமாக பின்பற்றும் ஒரு விஷயம் இருக்கிறது இந்த வருடமும் டிசம்பர் 21 காலை 10.8 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்களிடமிருந்து ஒரு விருந்து காத்திருக்கிறது” என்று அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளது.

ALSO READ  தீனி படம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன் !

அதில் என்ன வெளியிடப் போகிறோம் என்பதனை படக்குழு தெரிவிக்கவில்லை ஆனால் இணையத்தில் கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் ஆகத்தான் இருக்கும் என்று பலரும் இதனை ட்ரண்ட் செய்து வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bridal உடையில் கலக்கும் ஜான்வி கபூர்

News Editor

இணையதள தொடரில் நடிகர் வடிவேலு…

Admin

மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor