சினிமா

“தள்ளி போகாதே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஆர் கண்ணன் ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் இவருக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

இந்நிலையில்தான் இவர் கடைசியாக இயக்கி வெளியான படம் பூமராங், அதனையடுத்து “தள்ளிப்போகாதே” என்ற பெயரில் நடிகர் அதர்வாவை வைத்து புதிய  படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த “நின்னு கோரி” என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’  திரைப்படத்தையும், அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதே என இரு படங்களையும் அவர் இயக்கி வந்தார். சந்தானம் நடிப்பில் தயாரான ‘பிஸ்கோத்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ALSO READ  நடிகர் வேணு அரவிந்த் நலமுடன் உள்ளார்- சக நடிகர் விளக்கம்..!

இந்தநிலையில் “தள்ளிப் போகாதே” படத்தின் ரிலீஸ் பற்றி  அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படமானது வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது, மேலும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குட்நியூஸ்… வீடு திரும்பினார் வடிவேலு!

naveen santhakumar

விஜய்சேதுபதி மறுத்த வில்லன் வேடம்; பிரபல நடிகர் ஒப்பந்தம் ! 

News Editor

நெட்ஃபிளிக்ஸிடம் பெரும் விலைக்கு போனதா கோப்ரா; விளக்கமளித்த படக்குழு !

News Editor