சினிமா

கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான கொலைகாரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”.

இந்த படத்தில்  அவருக்கு ஜோடியாக  ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். அண்மையில் கோடியில் ஒருவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வித்தியாசமான அரசியல் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பும் ஆக்சன் கலந்த இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

ALSO READ  ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’… கலக்கிய கமல் ஹாசன்!

#Ajith #Manakaththa #VijayAntony #TamilThisai #Cinema #Cinemaupdate #CineNews #kollywood #Ajithkumar #RitikaSingh #aadhmika #KodiyiloruvanTrailer


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“அருண் விஜய் 33” படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor

இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கிய சோனு சூட்..! குவியும் பாராட்டுக்கள்..! 

News Editor

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor