சினிமா

குச்சுப்புடியில் கலக்கும் கும்கி நாயகி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா:

கொச்சியை பிறப்பிடமாக கொண்ட லட்சுமி மேனன் பள்ளிப் படிப்பு மேற்கொள்ளும்போது நடிக்கத் தொடங்கினார். கும்கி படத்தில் முதலில் அறிமுகமானாலும் தமிழில் முதன்முதலில் இவருக்கு வெளியான படம் “சுந்தரபாண்டியன்”. 

முதல் படமே இவருக்கு அமர்க்களமான வரவேற்பை பெற்றுத்தந்தது சுந்தரபாண்டியன் படத்தில் இவருக்கு சிறந்த அறிமுக நாயகி விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி நடைபோட்டன. அதனால் இவர் அதிர்ஷ்ட நாயகியாகவே கருதப்பட்டார். மேலும் பல பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன.

ALSO READ  ஒரேயொரு ட்வீட் தான்...மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தல அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க மாட்டோமா??? என்று அனைத்து நடிகைகளும் ஏங்கும்  நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை. அதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தனது ரசிகர்களை குஷி படுத்தும் நோக்கில் லட்சுமி மேனன்  அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார். தற்போது குச்சிப்பிடி நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு நடனத்தை கற்று, அதன் ஒரு சில அசைவுகளை புகைப்படமாக சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

ALSO READ  நடனம் பயிற்சியின் போது வழுக்கி விழுந்த நடிகை லட்சுமி மேனன்… 

இவரது குச்சிப்புடி நடன புகைப்படம் அனைவராலும் கவர்ந்து இழுக்கப்பட்டுள்ளது. லட்சுமிமேனன் சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும், தற்போது நடனத்திலும் கைத்தேர்ந்தவர் என்று நிரூபித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளையராஜா ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி..!

News Editor

‘கே.ஜி.எஃப் 2’ படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும்..!

News Editor

பல மொழிகளில் நன்றி சொன்ன நடிகை ரம்பா :

Shobika