சினிமா

“கொஞ்சம் பொறுமை காக்கவும்” மாநாடு பட தயாரிப்பாளர் வேண்டுகோள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர்  சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் வெளியாகி மாநாடு படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

மாநாடு படத்தின்  அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  கே.ஜி.எஃப் இயக்குனர், பாகுபலி நடிகர் கூட்டணியில் உருவாகும் படம் பூஜையுடன் துவக்கம்..! 

அதில், “சிறந்த படத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க எங்கள் குழு கடுமையாக உழைத்துவருகிறது. ஒவ்வொரு கட்டமாகப் படத்திற்கான அப்டேட் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆதலால், கொஞ்சம் பொறுமை காக்கவும். விரைவில் உங்களுக்கு அப்டேட் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

News Editor

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

Shanthi

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பவித்ரா !

News Editor